/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூரில் மாசி பட்ட பருத்தி ஏலம் துவக்கம்
/
அந்தியூரில் மாசி பட்ட பருத்தி ஏலம் துவக்கம்
ADDED : ஜூன் 25, 2024 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், மாசி பட்ட பருத்தி ஏலம் நேற்று துவங்கியது.
அந்தியூர், செம்புளிச்சாம்பாளையம், ஒட்டபாளையம், பட்லுார், பள்ளிபாளையம், கெட்டிசமுத்திரம், மைக்கேல்பாளையம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், ௩00 மூட்டை பி.டி., ரக பருத்தி கொண்டு வந்தனர்.
அந்தியூர் டவுன் பஞ்., தலைவர் பாண்டியம்மாள், ஏலத்தை தொடங்கி வைத்தார். வெளி மாவட்ட வியாபாரிகள், தரம் வாரியாக பிரித்து வைக்கப்பட்ட மூட்டைகளை ஏலம் எடுத்தனர்.