ADDED : ஏப் 24, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,ஈரோடு வீரப்பன்சத்திரம் கருப்பண்ணன் வீதியை சேர்ந்த செந்தில்-ராணி தம்பதி மகள் கார்த்திகா. இவர் 9ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 21 இரவு பாட்டி வீட்டுக்கு சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து கிளம்பி சென்றார்.
நீண்ட நேரமாகியும் மகள் வராததால் தன் தாய் வீட்டுக்கு சென்று ராணி விசாரித்துள்ளார். அப்போது கார்த்திகா, பாட்டி வீட்டுக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.
அக்கம் பக்கம், நண்பர்கள், உறவினர் வீடுகளில் தேடியும் கார்த்திகா குறித்து தகவல் ஏதும் இல்லை. ராணி அளித்த புகாரின் படி, வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

