/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செக்கானுார் காவிரியில் செத்து மிதந்த மீன்கள்
/
செக்கானுார் காவிரியில் செத்து மிதந்த மீன்கள்
ADDED : மே 22, 2024 06:27 AM
மேட்டூர் : மேட்டூர் அணை அருகே, காவிரி குறுக்கே செக்கானுார் கதவணை மின் நிலையம் உள்ளது. அணை அடிவாரம் முதல் செக்கானுார் வரை காவிரியாற்றில், 0.5 டி.எம்.சி., நீர் மின் உற்பத்திக்கு தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த நீரில் கட்லா, ரோகு, மிர்கால், வாலை உள்ளிட்ட பெரு ரக மீன்கள், அரைஞ்சான், திலேப்பியா உள்ளிட்ட சிறு வகை மீன்கள் காணப்படுகின்றன.
சில நாட்களாக மேட்டூர் சுற்றுப்பகுதியில் கோடை மழை பெய்கிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை பெய்த மழையால், நீரில் மீன்களுக்கு ஆக்சிஜன் குறைந்தது. சுவாசிக்க மீன்கள் நீரின் மேற்பரப்புக்கு வந்தன. இதில் சிறு ரக அரைஞ்சான், திலேப்பியா வகை மீன்கள் அரை டன் வரை செத்து, காவிரி கரையோரம் ஒதுங்கின.
அந்த மீன்களையும், நீரில் மயங்கி மிதந்த மீன்களையும், மீனவர்கள் பரிசலில் சென்று சேகரித்து சுத்தம் செய்து மக்களுக்கு ஒரு கிலோ, 50 ரூபாய் வரை விற்றனர். மீன்வளத்துறை மேட்டூர் உதவி இயக்குனர் உமா கலைச்செல்வி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். மீன்வளத்துறை ஊழியர்கள், செத்து ஒதுங்கிய மீன்களை சேகரித்து அதே பகுதியில் பள்ளம் தோண்டி புதைத்தனர்.

