/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சூரம்பட்டி அணைக்கட்டில் செத்து மிதந்த மீன்கள்
/
சூரம்பட்டி அணைக்கட்டில் செத்து மிதந்த மீன்கள்
ADDED : மே 19, 2024 03:10 AM
ஈரோடு: ஈரோட்டில், பெரும்பள்ளம் ஓடை நடுவே, சூரம்பட்டி வலசு பகுதியில் தடுப்பணை அமைந்துள்ளது. இதன் மூலம், 1,490 ஏக்கர் நிலம் நன்செய் ஊத்துக்குளி வாய்க்கால் மூலம் பாசனம் பெறுகிறது. ஆண்டுக்கு, 10 மாதங்கள் வரை தடுப்பணையில் தண்ணீர் இருக்கும். தடுப்பணையில் நேற்று ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
பல ஆண்டுகளாக தடுப்பணையில் சுத்தமான மழை மற்றும் கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீர் சென்றது. நீர் வழித்தடத்தில் சாய அல்லது தோல் ஆலை கழிவு நீர் தற்போது கலப்பதால், தடுப்பணை நீர் குழம்பு போல் காணப்படுகிறது. இதனால் மீன்கள் இறந்திருக்க வேண்டும். தடுப்பணைக்கு வரும் நீர் வழிதடத்தில் சாயக்கழிவுநீர் கலக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.

