sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குருநாதசுவாமி தேர் கோவிலை நெருங்கும் போது வந்த மழையால் பக்தர்கள் பரவசம்

/

குருநாதசுவாமி தேர் கோவிலை நெருங்கும் போது வந்த மழையால் பக்தர்கள் பரவசம்

குருநாதசுவாமி தேர் கோவிலை நெருங்கும் போது வந்த மழையால் பக்தர்கள் பரவசம்

குருநாதசுவாமி தேர் கோவிலை நெருங்கும் போது வந்த மழையால் பக்தர்கள் பரவசம்


ADDED : ஆக 09, 2024 02:42 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: மடப்பள்ளிக்கு வந்தடைந்த, குருநாதசுவாமி கோவில் தேர் கோவிலை நெருங்கும் போது, மழை பெய்ததால் பக்தர்கள் பரவ-சமடைந்தனர்.

அந்தியூர், புதுப்பாளையத்தில் பிரசித்திபெற்ற குருநாதசுவாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தேர்திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். அந்த வகையில் நடப்பாண்டு கடந்த மாதம், 17ல் பூச்சாட்டுதலுடன் துவங்கி, 24ல், வனக்கோ-விலில் கொடியேற்றுதல் நிகழ்ச்சி, கடந்த 6 முதல் வனபூஜை நடந்தது. முக்கிய நிகழ்வான ஆடிப்பெருந்தேர்திருவிழா, நேற்று முன்தினம் வெகு விமர்சையாக நடந்தது. இதற்காக குருநாதசு-வாமி கோவில் மடப்பள்ளியில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட சப்-பரத்தில் காமாட்சியம்மன், 60 அடி மகமேரு தேரில் பெருமாள், குருநாதசுவாமி ஆகியோர் வெள்ளிகவசத்தில் பக்தர்களுக்கு எழுந்-தருளினர். அங்கிருந்து தேர்களை பக்தர்கள் தோளில் சுமந்தபடி, வனக்கோவிலை வந்தடைந்தனர்.

அங்கே சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மீண்டும் நேற்று காலை, சுவாமிகளை பக்தர்கள் வனக்கோவிலில் இருந்து புதுப்பாளையம் மடப்பள்ளிக்கு கொண்டு வந்தனர். குருநாதசு-வாமி தேர் கோவிலை வந்தடையும் நேரத்தில், கோவில் வளா-கத்தில் 10 நிமிடம் மழை பெய்தது. இதையடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். இன்றும், நாளையும் குருநாதசுவாமி, பெருமாள்சுவாமி, காமாட்-சியம்மன் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பா-லிக்கின்றனர். வரும் 14ம் தேதி பால் பூஜையுடன் பண்டிகை நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us