/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திண்டல் வேளாளர் பொறியியல் கல்லுாரி 23வது ஆண்டு விழா
/
திண்டல் வேளாளர் பொறியியல் கல்லுாரி 23வது ஆண்டு விழா
திண்டல் வேளாளர் பொறியியல் கல்லுாரி 23வது ஆண்டு விழா
திண்டல் வேளாளர் பொறியியல் கல்லுாரி 23வது ஆண்டு விழா
ADDED : மே 06, 2024 02:25 AM
ஈரோடு: ஈரோடு அருகே திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின், 23வது ஆண்டு விழா நடந்தது. வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
தாளாளர் சந்திரசேகர், பொருளாளர் அருண் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஜிப்டி மற்றும் எக்ஸ்.எல்.ஆர்.ஐ., நிறுவனத்தின் சென்னை மற்றும் ஜாம்ஷெட்பூர் மனிதவள இயக்குனர் சத்திய பிரகாஷ் சேகரன் பங்கேற்றார். கல்லுாரியில் பல்வேறு வகையில் சிறந்து விளங்கிய, 96 மாணவ--மாணவியருக்கு சான்றிதழ் வழங்கினார்.
நடப்பாண்டில் வெளிச்செல்லும் அனைத்து வகையிலும் சிறந்து விளங்கிய, 10 பேருக்கு, விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
இந்த கல்வி ஆண்டின் இறுதியாண்டு பயிலும் கம்ப்யூட்டர் அறிவியல் துறை மாணவி நட்சத்திராவுக்கு, மிகச்சிறந்த மாணவர் விருது வழங்கப்பட்டது. விழாவில், 636 மாணவ--மாணவியருக்கு பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் பணி நியமன உத்தரவு வழங்கினார்.
வேளாளர் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை மற்றும் படிப்பில் சிறந்து விளங்கும், 255 மாணவ, மாணவியருக்கு இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை, 1.50 கோடி ரூபாய் அளவில் வழங்கப்பட்டுள்ளதாக கல்லுாரி செயலாளர் தெரிவித்தார். நிறைவில் மாணவ--மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் கல்லுாரி முதல்வர் ஜெயராமன், வேளாளர் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் ராஜமாணிக்கம், குலசேகரன், சின்னசாமி, வேலுமணி, பாம்பணன், யுவராஜா, நிர்வாக மேலாளர் பெரியசாமி, அனைத்து துறை தலைவர், பேராசிரியர் மற்றும் மாணவ,
மாணவியர் கலந்து கொண்டனர்.