/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானியில் நீர் திறப்பு பிரச்னை விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை
/
கீழ்பவானியில் நீர் திறப்பு பிரச்னை விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை
கீழ்பவானியில் நீர் திறப்பு பிரச்னை விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை
கீழ்பவானியில் நீர் திறப்பு பிரச்னை விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை
ADDED : ஏப் 21, 2024 07:18 AM
ஈரோடு : பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில், 2ம் போக பாசனப்பகுதிக்கு தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில், அமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்தில் ஐந்தாம் திறப்புக்கு கடந்த, 18ல் தண்ணீர் திறந்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாததால், கீழ்பவானி விவசாயிகளில் ஒரு பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்தனர். இதற்கிடையில் ஈரோடு, சம்பத் நகரில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வீட்டில், ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, சுதந்திரராசு உட்பட விவசாயிகளிடம், நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.
வரும், 22க்குள் தண்ணீர் திறப்பு குறித்து நல்ல தகவல் கிடைக்க பெற்றுத்தருவதாக அமைச்சர் தரப்பில் உறுதியளித்ததாகவும், அவ்வாறு அன்று தண்ணீர் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்படாவிட்டால் அன்று முதல் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் போராட்டம் நடத்த என முடிவு செய்துள்ளனர்.