/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பா.ஜ., தலைவர்கள் பேச்சில் அதிருப்தி த.மா.கா., பிரமுகர் கட்சியில் விலகல்

ADDED : மே 30, 2024 09:15 PM
ஈரோடு:ஈரோடு, திண்டல் பகுதியை சேர்ந்தவர் சி.கவுதமன், 62, காங்., கட்சியில் இருந்தவர், மூப்பனார் த.மா.கா., துவங்கியபோது அக்கட்சிக்கு மாறினார். த.மா.கா., மாநில தேர்தல் முறையீட்டுக்குழு உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினராக இருந்தார்.
லோக்சபா தேர்தலில் நாமக்கல், கரூர், திருப்பூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராகவும் பணி செய்தார். இந்நிலையில் கட்சியில் இருந்து விலகுவதாக, கவுதமன் நேற்று அறிக்கை வெளியிட்டார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
தற்போதைய கூட்டணி கட்சியான, பா.ஜ., செயல்பாடு, தேர்தல் அறிக்கை, அணுகுமுறை ஆபத்தான அரசியலுக்கான வழியாகும். பிரதமர் எவ்வாறு பேச வேண்டும் என்ற நெறிமுறை இன்றி, தன்னை கடவுளின் அவதாரமாக பேசி வருகிறார். இதுபோன்ற, பா.ஜ., தலைவர்களின் பேச்சு, கூட்டணி செயல்பாடுகள் பிடிக்காததால், த.மா.கா.,வில் இருந்து விலகுகிறேன்.
பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தபோதே விலக நினைத்தேன். தேர்தல் நேரத்தில், என் நண்பரான ஈரோடு த.மா.கா., வேட்பாளர் விஜயகுமார் அறிவிக்கப்பட்ட சூழலில் கட்சியில் இருந்து விலகினால் நன்றாக இருக்காது என தேர்தல் முடிந்த பின் விலகுகிறேன். இதுபோன்ற முடிவை எடுக்கும் தலைவருடன் பயணிக்க முடியாது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.