ADDED : அக் 02, 2026 02:59 AM
ஈரோடு: ஈரோட்டில் ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட மாநாடு ஸ்டாலின் சிவ-குமார், சந்திரசேகர், செல்வம் ஆகியோர் தலைமையில் நடந்தது.
ஏ.ஐ.டி.யு.சி., தேசிய துணை தலைவர் எம்.பி., சுப்பராயன், தேசிய செயலர் மூர்த்தி, மாவட்ட செயலர் குணசேகரன், மாநில செயலர் சின்னசாமி பேசினர்.ஈரோட்டில் பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட்களின் பராமரிப்பு, சுங்க கட்டணம் வசூலிக்கும் உரிமை நீண்ட காலத்துக்கு குறைந்த தொகைக்கு தனியாருக்கு வழங்கும் முடிவை கைவிட வேண்டும். ஈரோடு மாநகரில் தடையின்றி குடிநீர் வழங்கவும், பழுதடைந்த, தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும்.
உள்ளாட்சி, மருத்துவம், மின்சாரம், அரசு போக்குவரத்து, டாஸ்மாக், சிவில் சப்ளை உட்பட அனைத்து அரசு துறைகளிலும் ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட்டு, நிரந்தர பணிகளாக மாற்றி நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
