/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பயன்பாட்டுக்கு வராத மாநகர பொது சுகாதார ஆய்வகம்
/
பயன்பாட்டுக்கு வராத மாநகர பொது சுகாதார ஆய்வகம்
ADDED : செப் 03, 2024 03:56 AM
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், காவேரி ரோட்டில், மாநகராட்சி சார்பில், 22 லட்சம் ரூபாய் மதிப்பில் நகர்புற பொது சுகாதார ஆய்வகம் கட்டப்பட்டது. அமைச்சர் சுப்பிரமணியன் கடந்த மார்ச், 13ம் தேதி, காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
ஆறு மாதமாகியும் கட்டடத்தின் உள்கட்டமைப்பு பணியை முடிக்காமல், மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்காமல், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருப்பதாக, அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதனால் கர்ப்பிணிகள், முதியோர் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் ஆய்வகத்துக்கு செல்கின்றனர். ஏழை, எளிய மக்களுக்காக அமைத்த ஆய்வகத்தை பயன்பாட்டுக்கு விடாமல், மெத்தனம் காட்டுவது முறையா? என்றும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.