/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., மாஜி அமைச்சர் வீட்டில் திருடிய சிறுவர்களை பிடிக்க தீவிரம்
/
தி.மு.க., மாஜி அமைச்சர் வீட்டில் திருடிய சிறுவர்களை பிடிக்க தீவிரம்
தி.மு.க., மாஜி அமைச்சர் வீட்டில் திருடிய சிறுவர்களை பிடிக்க தீவிரம்
தி.மு.க., மாஜி அமைச்சர் வீட்டில் திருடிய சிறுவர்களை பிடிக்க தீவிரம்
ADDED : ஜூலை 08, 2024 05:22 PM
ஈரோடு:தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீட்டில் நடந்த திருட்டில், சிறுவர்கள் ஈடுபட்டிருப்பதை போலீசார் உறுதி செய்து, அவர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஈரோடு அருகே மாணிக்கம்பாளையம், வி.ஐ.பி., நகரில் கணவர் ஜெகதீசனுடன் வசிப்பவர் சுப்புலட்சுமி, 72, தி.மு.க., முன்னாள் மத்திய, மாநில அமைச்சர். துணை பொது செயலராக இருந்து, தற்போது கட்சியில் இருந்து ஒதுங்கியுள்ளார்.
இவரின், 25 ஏக்கர் பண்ணை வீடு, மொடக்குறிச்சி அருகே புன்செய்காளமங்கலம், சின்னம்மாபுரம் மினி காட்டில் உள்ளது. கடந்த, 23ம் தேதி பண்ணை வீட்டின் கதவை உடைத்து, 50 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள மலையம்பாளையம் போலீசார், சிறுவர்கள் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்துள்ளனர்.
இதுபற்றி போலீசார் கூறியதாவது:
பண்ணை வீட்டுக்குள், 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் வந்து சென்ற, 'சிசிடிவி' கேமரா காட்சி கிடைத்துள்ளது. சிறுவன் தனியாக வந்திருக்க வாய்ப்பில்லை. அவனுடன் மேலும் சிலர் வந்திருக்க கூடும் என நம்புகிறோம்.
இந்த சிறுவர்கள் ரயில் தண்டவாளத்தை ஒட்டிய வீடுகளில், கைவரிசை காட்டுவதை வாடிக்கையாக கொண்டவர்கள். இவர்கள் நிலையான இடத்தில் தங்காதவர்கள். கைவரிசை காட்டிய சிறுவன் உள்ளிட்ட கும்பலை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
இவ்வாறு கூறினர்.