ADDED : அக் 09, 2026 04:22 AM

ஈரோடு:ஈரோடு
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப
சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் நேற்று, கருப்பு பட்டை
அணிந்து பணி செய்தனர்.
அரசாணை எண், 113ல் குறிப்பிட்டபடி
மருத்துவ துறையில் டாக்டர்கள் முதல் அனைத்து பணிகளிலும் ஆட்குறைப்பு,
பணி நிரவல் உட்பட பல்வேறு உத்தரவுகளில் திருத்தம் மேற்கொள்ள
வேண்டும். அரசு மருத்துவமனைகளில் டி.எம்.எஸ்., மருத்துவ
பணியிடங்களை உயர்த்த வேண்டும். சீமான்ங் மருத்துவமனைகளில்
குறைந்தபட்சம் ஐந்து மகப்பேறு மருத்துவர்கள், நான்கு மயக்கவியல்,
நான்கு குழந்தைகள் மருத்துவர்கள் இருக்க வேண்டும். மாதம், 60
பிரசவங்களுக்கு குறைவாக நடக்கும் சீமான்ங் மையங்களில் உள்ள
மகப்பேறு, மயக்கவியல், குழந்தைகள் நல மருத்துவர்களை தேவைப்படும்
இடங்களுக்கு மாற்ற வலியுறுத்தி, இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
