/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மரத்தில் வேன் மோதி டிரைவர் உயிரிழப்பு
/
மரத்தில் வேன் மோதி டிரைவர் உயிரிழப்பு
ADDED : ஏப் 25, 2024 04:38 AM
தாராபுரம்: தாராபுரம் அருகே, நள்ளிரவில் வேனை ஓட்டிச் சென்ற போது ஏற்பட்ட விபத்தில், டிரைவர் உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள மடத்துக்குளம், கொழுமத்தை சேர்ந்தவர் உதயகுமார், 28. உடுமலையில் உள்ள கோழி நிறுவனத்தில், ஈச்சர் வேன் ஓட்டி வந்தார். இவர், நேற்று முன் தினம் வேலை முடிந்து நேற்று அதிகாலை, 1:00 மணியளவில் உடுமலை, தாராபுரம் சாலையில், வேனை ஓட்டி வந்தார். தளவாய்பட்டினம், தர்கா அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக வேன் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில், படுகாயம் அடைந்த உதயகுமார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவ்வழியே சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், ஆம்புலன்ஸ் மூலம் உதயகுமாரை மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

