/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடிவேரி அணையில் நீரில் மூழ்கி ஊழியர் பலி
/
கொடிவேரி அணையில் நீரில் மூழ்கி ஊழியர் பலி
ADDED : மே 02, 2024 07:32 AM
டி.என்.பாளையம் : சத்தியமங்கலம், மலையடி புதுாரை சேர்ந்தவர் மகேந்திரன், 31. சத்தியமங்கலத்தில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு ரம்யா என்ற மனைவி, ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் மகேந்திரன், நேற்று மதியம் கொடிவேரி அணையில் இரண்டு நண்பர்களுடன் குளிக்க வந்துள்ளார். அணையில் இருந்து தண்ணீர் கொட்டும் பகுதியில் குளித்து கொண்டு இருந்தனர்.
அப்போது, மகேந்திரன் சற்று ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார். உடன் சென்ற நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியாததால், பங்களாப்புதுார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆற்றில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்த மகேந்திரனை மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
பங்களாப்புதுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

