/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூகலுார் கிளை வாய்க்காலில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு
/
கூகலுார் கிளை வாய்க்காலில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு
கூகலுார் கிளை வாய்க்காலில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு
கூகலுார் கிளை வாய்க்காலில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு
ADDED : ஜூலை 22, 2024 11:59 AM
கோபி: பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனமாக, 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. தடப்பள்ளி வாய்க்காலின், 36வது கி.மீ., தொலைவில், பாரியூர் அருகே உருளை என்ற இடத்தில், கூகலுார் கிளை வாய்க்கால் பிரிகிறது.
இதன் மூலம், 3,200 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. தற்போது முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாரியூர் அருகே கூகலுார் கிளை வாய்க்காலில், ஆகாயத்தாமரை செடி மற்றும் கொடி ஆக்கிரமித்துள்ளதால், சீராக தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீர்வள ஆதாரத்துறையினர் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற, பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்