/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு - பெருந்துறை சாலை விரிவாக்கம்:மந்த கதியில் நடப்பதால் அவதி
/
ஈரோடு - பெருந்துறை சாலை விரிவாக்கம்:மந்த கதியில் நடப்பதால் அவதி
ஈரோடு - பெருந்துறை சாலை விரிவாக்கம்:மந்த கதியில் நடப்பதால் அவதி
ஈரோடு - பெருந்துறை சாலை விரிவாக்கம்:மந்த கதியில் நடப்பதால் அவதி
ADDED : ஜூன் 19, 2024 02:13 AM
ஈரோடு:ஈரோடு - பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை, மிக முக்கிய சாலையாக விளங்குகிறது. இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி மற்றும் கல்லுாரி வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் விரிவாக்கப்பணி ஓராண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. பணி முடியும்போது, ஈரோட்டில் இருந்து பெருந்துறை வரையிலான பயண நேரம் குறையும்.
ஆனால், ஈரோடு முதல் திண்டல் வரையிலான விரிவாக்கப்பணி மந்தமாக நடக்கிறது. இதனல் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
சாலை அமைப்பதற்கான சிலாப்புகள், ஜல்லிகள், கம்பிகளை சாலையோரத்தில் போட்டுள்ளனர். இதனால் இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள், போதிய வெளிச்சமில்லாததால் விபத்தில் சிக்குகின்றனர்.
இந்த சாலையில் அதிக அளவில் மருத்துவனைகள் உள்ளன. சாலை விபத்துக்களில் சிக்குவோரை ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்போது, அவர்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. மந்த கதியில் நடக்கும் சாலை விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

