/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜாதி கட்சியாக மாறும் ஈரோடு அ.தி.மு.க., உலாவும் நிர்வாகிகள் பட்டியலால் புது சர்ச்சை
/
ஜாதி கட்சியாக மாறும் ஈரோடு அ.தி.மு.க., உலாவும் நிர்வாகிகள் பட்டியலால் புது சர்ச்சை
ஜாதி கட்சியாக மாறும் ஈரோடு அ.தி.மு.க., உலாவும் நிர்வாகிகள் பட்டியலால் புது சர்ச்சை
ஜாதி கட்சியாக மாறும் ஈரோடு அ.தி.மு.க., உலாவும் நிர்வாகிகள் பட்டியலால் புது சர்ச்சை
ADDED : மே 30, 2024 10:38 PM
ஈரோடு,:ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகளில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தவிர, மற்றவர்கள் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர் எனக்கூறி, நிர்வாகிகள் பட்டியல் உலா வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அ.தி.மு.க., ஜாதிக் கட்சியாக மாறி வருகிறது என ஈரோடு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வில் ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி என சட்டசபை தொகுதிகள் அடங்கி உள்ளன. இப்பகுதியில் கவுண்டர்கள் அதிகமாகவும், அடுத்ததாக முதலியார், அடுத்து பிற சமூகத்தினரும் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலின்போதும், தங்கள் சமூகத்துக்கு வாய்ப்பு தர முதலியார் சமூகத்தினர் வலியுறுத்துவர். ஆனால், கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்களே வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வில் செயலர் ராமலிங்கம், எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் தென்னரசு, மகளிரணி செயலர் மல்லிகா, அம்மா பேரவை செயலர் சதீஸ்குமார் என மாவட்ட, மாநில பதவி - பெயர் - ஜாதியை குறிப்பிட்டு, பட்டியல் வெளியாகி இருக்கிறது.
அதில் கலைப்பிரிவு செயலர் சேகர் - வேட்டுவ கவுண்டர், கட்டுமான பிரிவு செயலர் மணிகண்டன் - வன்னியர், தொழிற்சங்க செயலர் துரைசேவுகன் - தேவேந்திரகுல வேளாளர், மீனவரணி செயலர் சுமன்குமார் - செம்படவர் என, 10க்கும் குறைவானவர்கள் பெயரை குறிப்பிட்டு, 'மாநகர் மாவட்ட அ.தி.மு.க., - ஜாதி கட்சியாக செயல்படுகிறது' என குறிப்பிட்டுள்ளனர். இப்பட்டியல் அரசியல் வட்டாரங்களில் வேகமாக பரவுவதால் அ.தி.மு.க.,வில் புது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.