sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மொபைல் திருடர் ஆதிக்கத்தில் ஈரோடு பஸ் ஸ்டாண்ட்

/

மொபைல் திருடர் ஆதிக்கத்தில் ஈரோடு பஸ் ஸ்டாண்ட்

மொபைல் திருடர் ஆதிக்கத்தில் ஈரோடு பஸ் ஸ்டாண்ட்

மொபைல் திருடர் ஆதிக்கத்தில் ஈரோடு பஸ் ஸ்டாண்ட்


ADDED : ஆக 06, 2024 08:20 AM

Google News

ADDED : ஆக 06, 2024 08:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்ட் சமீப காலமாக, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரின் கூடார-மாக மாறி வருகிறது. உல்லாசத்துக்கு அழைப்ப-வர்கள், திருநங்கைகள், வழிப்பறி நபர்கள், ஓரின சேர்க்கையாளர்களின் இடமாக நள்ளிரவு நேரங்-களில் செயல்படுகிறது. ஈரோடு பஸ் ஸ்டாண்ட் ஈரோடு டவுன் போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

டவுன் கிரைம் பிரிவில் ஐந்து போலீசார் மட்டுமே உள்ளனர். அதில் இருவர் தற்போது விடுமு-றையில் சென்றுள்ளனர். மூவர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் பஸ் ஸ்டாண்டில் பகல், இரவு ரோந்து கேள்விக்குறியாகி உள்ளது. சட்டம் ஒழுங்கு போலீசாரையும் ரோந்து, கண்கா-ணிப்பு பணியில் பார்ப்பது அரிதாக உள்ளது.

இதனால் இரவு நேரங்களில் வழிப்பறி நபர்கள், சமூக விரோதிகள், பயணிகள் கண் சற்று அயரும் நேரத்தில் மொபைல்போன், விலை உயர்ந்த பொருட்களை திருடி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு மட்டும், 8 மொபைல்போன்கள், மர்ம நபர்களால் திருடி செல்லப்பட்டதாக போலீசாருக்கு புகார் சென்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி பயணிகள் கூறியதாவது: போலீசார் எண்ணிக்கையை பஸ் ஸ்டாண்டில் அதிகரித்து, ரோந்து மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி சமூக விரோதிகள், வழிப்பறி நபர்கள், திருடர்-களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்






      Dinamalar
      Follow us