/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளஸ் 1 தேர்வில் ஈரோடு மாவட்டம் 2வது இடம்: அரசு பள்ளிகள் அளவில் கிடைத்தது முதலிடம்
/
பிளஸ் 1 தேர்வில் ஈரோடு மாவட்டம் 2வது இடம்: அரசு பள்ளிகள் அளவில் கிடைத்தது முதலிடம்
பிளஸ் 1 தேர்வில் ஈரோடு மாவட்டம் 2வது இடம்: அரசு பள்ளிகள் அளவில் கிடைத்தது முதலிடம்
பிளஸ் 1 தேர்வில் ஈரோடு மாவட்டம் 2வது இடம்: அரசு பள்ளிகள் அளவில் கிடைத்தது முதலிடம்
ADDED : மே 15, 2024 02:15 AM
ஈரோடு:பிளஸ் 1 தேர்வில் ஈரோடு மாவட்டம், 95.56 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்தது. அதேசமயம் அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்தில், மாநிலத்தில் முதலிடம் பெற்றது.
தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவு நேற்று காலை வெளியிட்டது. ஈரோடு மாவட்டத்தில், 10,729 மாணவர், 12,060 மாணவியர் என, 22,789 பேர் எழுதினர். இதில் மாணவர்கள், 10,070 பேர், மாணவியர், 11,707 பேர் என, 21,777 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர் தேர்ச்சி சதவீதம், 93.86; மாணவியர் தேர்ச்சி, 97.07 சதவீதம்; மொத்தம், 95.56 சதவீத தேர்ச்சி பெற்று மாநிலத்தில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
மாவட்டத்தில், 113 அரசு பள்ளிகளை சேர்ந்த, 5,067 மாணவர், 6,558 மாணவியர் என, 11,625 பேர் தேர்வு எழுதினர். இதில், 4,544 மாணவர், 6,251 மாணவியர் என, 10,795 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தம், 92.86 சதவீதம் தேர்ச்சி பெற்று, அரசு பள்ளிகளில் மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்தாண்டும், இந்தாண்டும் பிளஸ் 1 ஒட்டு மொத்த தேர்ச்சியில், ஈரோடு மாவட்டம் தொடர்ந்து மாநிலத்தில் இரண்டாமிடம் வகிக்கிறது.
பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் இரண்டாமிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளிகள்-13, நிதியுதவி பள்ளிகள்-2, தனியார் பள்ளிகள்-49, சுய நிதி பள்ளிகள்- 6 என, 70 பள்ளிகள், நுாறு சதவீத தேர்ச்சி பெற்றன.
மாநிலத்தில் 2வது இடம், அரசு பள்ளிகளில் மாநிலத்தில் முதலிடம் பிடிக்க காரணமாக இருந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து, வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கணினி அறிவியலில் 211 பேர் 'சென்டம்'
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் ௧ பொதுத்தேர்வில் இயற்பியலில் 54 மாணவ, மாணவியர், வேதியியல்-24, கணிதம்-40, கணினி அறிவியல்-211, பொருளாதாரம்-42, வணிகவியல்-42, கணக்குபதிவியல்-28 மற்றும் வணிக கணித பாடத்தில்-13 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

