/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இன்று ஈரோடு லோக்சபா தேர்தல்: ஓட்டளிக்க 15.38 லட்சம் வாக்காளர் தயார்
/
இன்று ஈரோடு லோக்சபா தேர்தல்: ஓட்டளிக்க 15.38 லட்சம் வாக்காளர் தயார்
இன்று ஈரோடு லோக்சபா தேர்தல்: ஓட்டளிக்க 15.38 லட்சம் வாக்காளர் தயார்
இன்று ஈரோடு லோக்சபா தேர்தல்: ஓட்டளிக்க 15.38 லட்சம் வாக்காளர் தயார்
ADDED : ஏப் 19, 2024 06:34 AM
ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதியில் இன்று தேர்தல் நடக்கிறது. மொத்தம், 15.38 லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டுப்பதிவு செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதியில் ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி ஈரோடு லோக்சபா தொகுதி; பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி திருப்பூர் லோக்சபா தொகுதி; பவானிசாகர் சட்டசபை தொகுதி நீலகிரி லோக்சபா தொகுதியிலும் உள்ளன.
இதன்படி மாவட்ட அளவில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் - 2,31,823 வாக்காளர்கள், ஈரோடு மேற்கு - 2,98,858, மொடக்குறிச்சி - 2,28,700, பெருந்துறை - 2,34,987, பவானி - 2,39,019, அந்தியூர் - 2,17,465, கோபி - 2,55,260, பவானிசாகர் - 2,60,384 என, 19 லட்சத்து, 66,496 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட அளவில், 198 மண்டலங்களில், 2,222 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, ஈரோடு லோக்சபா தொகுதியில், உள்ள குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் - 2,57,704 வாக்காளர்கள், ஈரோடு கிழக்கு - 2,31,823, ஈரோடு மேற்கு - 2,98,858, மொடக்குறிச்சி - 2,28,700, தாராபுரம் - 2,60,247, காங்கேயம் - 2,61,446 என, 15 லட்சத்து, 38,778 வாக்காளர்கள் இன்று ஓட்டுப்பதிவு செய்ய தயாராக உள்ளனர். இத்தொகுதியில், 146 மண்டலங்களில், 1,688 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
தேர்தல் பணியில் ஈடுபடும் போலீஸார், அவர்களுடன் இணைந்தவர்கள், கலெக்டர் அலுவலக பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர், ஆசிரியர், 85 வயதுக்கு மேற்பட்டோர், ராணுவத்தில் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள் என, 7,140 பேர் தபால் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். மற்றவர்கள் இன்று ஓட்டுப்பதிவு செய்ய உள்ளனர்.

