/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு - பழநிக்கு புதிய ரயில் திட்டம்:அ.தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி
/
ஈரோடு - பழநிக்கு புதிய ரயில் திட்டம்:அ.தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி
ஈரோடு - பழநிக்கு புதிய ரயில் திட்டம்:அ.தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி
ஈரோடு - பழநிக்கு புதிய ரயில் திட்டம்:அ.தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி
ADDED : ஏப் 16, 2024 01:27 AM
ஈரோடு:ஈரோடு லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம், பள்ளிபாளையம் நகரம், நெட்டவேலம்பாளையம், அண்ணா நகர், இந்திரா நகர், புளியம்பட்டி, சின்னஆலந்துார், பழையபாளையம், ஆனங்கூர், தண்ணீர்பந்தல்பாளையம், நத்தமேடு, பள்ளித்துார், திருச்செங்கோடு சாலை, ஆண்டிக்காடு உட்பட பல்வேறு இடங்களில் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டுக்கேட்டு, நேற்று வாக்காளர்களிடம் பேசியதாவது:பள்ளிபாளையம் பகுதி மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை களைய உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். இப்பகுதி முற்றிலும் விசைத்தறி கூடங்கள், ஜவுளி சார்ந்த பல்வேறு மதிப்பு கூட்டிய பணிகள் நடக்கும் பகுதியாகும். சாயக்கழிவு பிரச்னையால், இப்பகுதியில் ஜவுளி உற்பத்தி பாதித்து வருகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில், மிகப்பெரிய அளவிலான பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சாய, சலவை ஆலை பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.ஈரோடு லோக்சபா தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, ஈரோடு - காங்கேயம் - தாராபுரம் - பழநி ரயில் பாதை திட்டம் துவங்க மத்திய அரசை வலியுறுத்தி பெற்றுத்தருவேன். இதற்கான ஆய்வுப்பணிகள் முடிந்து, நிர்வாக மற்றும் நிதி அனுமதி மட்டும் கிடைக்கப்பெற்றால், திட்டத்தை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வேன்.மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்கவும், பள்ளிபாளையத்தை ஒட்டிய காவிரி ஆற்றின் கரைப்பகுதியை செம்மைப்படுத்தி, பொழுது போக்குடன் கூடிய பூங்கா, சாலை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு பேசினார்.முன்னாள் அமைச்சர் தங்கமணி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஓட்டு சேகரித்தனர்.

