/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பின்தொடர்ந்து பெண்ணிடம் நகை பறிப்பு ஈரோட்டில் பைக் கொள்ளையர் அட்டகாசம்

ADDED : ஆக 17, 2024 04:22 AM
ஈரோடு: ஈரோடு, ரங்கம்பாளையம், ரயில் நகரை சேர்ந்தவர் சுரேஷ். ஈரோடு பார்மஸியில், கேன்டீன் நடத்தி வருகிறார். இவரது மனைவி கல்யாணி, 38; நேற்று முன்தினம் இரவு, 9:30 மணியளவில் ரயில் நகரில் ஒரு வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்து மற்றொரு வீதியில் உள்ள தாயார் வீட்டுக்கு, தாயாரை ஸ்கூட்டியில் அழைத்து சென்றார்.
வீட்டுக்கு சென்றதும் ஸ்கூட்டியில் இருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றார். அப்போது பைக்கில் பின் தொடர்ந்து வந்த, 25 வயது மதிக்கத்தக்க இருவர், கல்யாணியை கீழே தள்ளிவிட்டு, அவர் அணிந்திருந்த ஏழரை பவுன் தாலியை பறித்து தப்பினர். கல்யாணி வீட்டில் இருந்து புறப்பட்டபோதே, முகவரி விசாரிப்பது போல இருவரும் பேச்சு கொடுத்து, அவர் அணிந்திருந்த நகைகளை கவனித்துள்ளனர். அவர் ஸ்கூட்டியில் புறப்பட்டதும், பின் தொடர்ந்து வந்து, நகையை பறித்து தப்பியுள்ளனர். நகை பறித்த பைக் கொள்ளையரை, தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.