/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'ஸ்ட்ராங் ரூமில்' வைக்கப்பட்ட இ.வி.எம்.கள்
/
'ஸ்ட்ராங் ரூமில்' வைக்கப்பட்ட இ.வி.எம்.கள்
ADDED : ஏப் 21, 2024 01:57 AM
ஈரோடு,:ஈரோடு லோக்சபா தொகுதியில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சித்தோடு அரசு கல்லுாரி பொறியியல் கல்லுாரி வளாக 'ஸ்ட்ராங் ரூமில்', பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, 1,688 ஓட்டுச்சாவடிகளில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் (இ.வி.எம்.,) உள்ளிட்ட இயந்திரங்கள் அனைத்தும், சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் சட்டசபை தொகுதி வாரியாக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அந்த அறையை, வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் முன்னிலையில், 'சீல்' வைத்த கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது:
ஈரோடு லோக்சபா தேர்தலில், 1,688 ஓட்டுச்சாவடிகளில் பதிவான இ.வி.எம்.,கள், அரசு பொறியியல் கல்லுாரியில் சட்டசபை தொகுதி வாரியாக, பொது தேர்தல் பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா, வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் முன்னிலையில், 'சீல்' வைக்கப்பட்டது.ஈரோடு லோக்சபா தேர்தலில், 70.5 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. 'ஸ்ட்ராங் ரூமில்' வைக்கப்பட்டுள்ள இ.வி.எம்.,கள் உள்ளிட்ட இயந்திரங்களை வேட்பாளர்களின் முகவர்கள் பார்த்து கொள்ளவும், 'ஸ்ட்ராங் ரூம்' முகப்பு பகுதியில், 30 இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அதுபோல, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், சிறப்பு காவலர் படை மற்றும் பட்டாலியன் போலீஸ், ஆயதப்படை போலீசார் கொண்ட மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு டி.எஸ்.பி., தலைமையில், மூன்று ஷிப்டாக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுவர். இவ்வாறு கூறினார்.

