ADDED : செப் 21, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:துணை
கலெக்டர், உதவி ஆணையர் (வணிக வரிகள்), கூட்டுறவு சங்கங்களின் துணை
பதிவாளர், மாவட்ட பதிவாளர், உதவி தொழிலாளர் ஆணையர் என குரூப்---1 காலி
பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்வு வரும், 27ல்
நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில், 6,837 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வு நடைபெறும் இடங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும்
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்வு அறைக்கும்
செல்லும்போது ஹால்டிக்கெட் கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும்.
