ADDED : செப் 21, 2026 06:05 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் ஞானசேகர், 34, டிரைவர். இவரது
நண்பர்களான ஈரோடு பெரியவலசு இளையராஜா, 39; ஈரோடு
இடையன்காட்டுவலசு சின்னமுத்து வீதி இளவரசன், 32; கோவை மாவட்டம்
அன்னுார் பச்சாம்பாளையம் சீரஞ்சிவி, 35, ஆகியோருடன்
மாணிக்கம்பாளையத்தில் மது குடித்துள்ளார்.
அப்போது மது குடிக்க
பணம் கேட்டு மூவரும் பணம் கேட்டு ஞானசேகரிடம் தகராறு செய்தனர். தர
மறுத்ததால் மூவரும் கட்டையாலும், பீர் பாட்டிலாலும் ஞானசேகரனை
தாக்கிவிட்டு தப்பி சென்றனர். ஞானசேகர் புகாரின்படி
வீரப்பன்சத்திரம் போலீசார் இளவரசன், சீரஞ்சிவியை கைது செய்தனர்.
தலைமறைவான இளையராஜாவை தேடி வருகின்றனர்.
