/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
யூனியன் மற்றும் வி.ஏ.ஓ.,அலுவலகங்களில் ஆய்வு
/
யூனியன் மற்றும் வி.ஏ.ஓ.,அலுவலகங்களில் ஆய்வு
ADDED : மே 07, 2024 02:32 AM
ஈரோடு;கொடுமுடி யூனியன் அலுவலகம் மற்றும் அப்பகுதியில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகங்களில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
கொடுமுடி யூனியன் அலுவலகத்தில், கடந்த ஆண்டிலும், சமீபமாகவும் பெறப்பட்ட மனுக்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தீர்வு காணப்பட்ட நாட்கள், அவற்றை முறையாக பதிவு செய்துள்ள விபரங்களை ஆய்வு செய்தார்.
பின், இச்சிப்பாளையம், வெங்கம்பூர் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கை, வழங்கப்பட்டுள்ள சான்றிதழ்கள், பட்டா மாறுதல், நில அளவை பதிவேடுகள் பராமரிப்புகளை ஆய்வு செய்தார். பொதுமக்களின் மனுக்களுக்கு உரிய பதில் வழங்கவும், குறைந்தபட்ச நாட்களில் தீர்வு காணவும் கலெக்டர் யோசனை தெரிவித்தார்.
அரசு பதிவேடுகளில் திருத்தம், சேர்த்தல், நீக்கம் போன்றவற்றை ஆவணங்களின் அடிப்படையில் செய்து, முறையாக பராமரிக்க உத்தரவிட்டார். கிராம, 'அ' பதிவேடு, கணினி 'அ' பதிவேடு ஒப்பிடும் பணிகளை ஒரு வார காலத்துக்குள் செய்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அலுவலக நடைமுறை கோப்புகள், பதிவேடுகளை தணிக்கை செய்தார்.
கொடுமுடி தாசில்தார் பாலகுமார், மண்டல துணை தாசில்தார் கலைசெல்வி ஆகியோர் உடனிருந்தனர்.