/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சதுர்த்திக்காக விநாயகர் சிலைகள் தயார் விற்பனை தொடங்கியதால் உற்சாகம்
/
சதுர்த்திக்காக விநாயகர் சிலைகள் தயார் விற்பனை தொடங்கியதால் உற்சாகம்
சதுர்த்திக்காக விநாயகர் சிலைகள் தயார் விற்பனை தொடங்கியதால் உற்சாகம்
சதுர்த்திக்காக விநாயகர் சிலைகள் தயார் விற்பனை தொடங்கியதால் உற்சாகம்
ADDED : செப் 02, 2024 02:48 AM
ஈரோடு: வரும், 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மாநகரில் விநாயகர் சிலை விற்பனை தொடங்கியுள்ளது.
பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, மீனாட்சிசுந்தரனார் சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சாலையோரங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.யாழி விநாயகர், சிம்ம வாகன விநாயகர், குதிரை வாகன விநாயகர் , கருட வாகன விநாயகர், சித்திபுத்தி விநாயகர் , ஆஞ்சநேய விநாயகர் , சிவன் பார்வதியுடன் உள்ள விநாயகர் என 150 வடிவங்களில் சிலைகள்
விற்பனைக்கு உள்ளன. 3 அடி முதல் 10 அடி வரை உள்ள சிலைகள், 200 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. மக்கள் இப்போதே சிலைகளை ஆர்வத்துடன் வாங்கி செல்வதாகவும், சிலர் முன்பதிவு செய்வதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர். மழை மற்றும் தூசிகளால் பாதிக்காமல் இருக்க, சிலைகளை பிளாஸ்டிக் கவர்களால்
மூடி வைத்துள்ளனர். இது தவிர களிமண்ணால் தயாரிக்கப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் பவானி அடுத்த வாய்க்கால் மேட்டில், ராஜஸ்தான் தொழிலாளர்களால் செய்யப்பட்ட, விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.