/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தள்ளிப்போகும் ஊ.கோட்டை குடிநீர் சப்ளை லாரிகளில் வினியோகம் செய்ய எதிர்பார்ப்பு
/
தள்ளிப்போகும் ஊ.கோட்டை குடிநீர் சப்ளை லாரிகளில் வினியோகம் செய்ய எதிர்பார்ப்பு
தள்ளிப்போகும் ஊ.கோட்டை குடிநீர் சப்ளை லாரிகளில் வினியோகம் செய்ய எதிர்பார்ப்பு
தள்ளிப்போகும் ஊ.கோட்டை குடிநீர் சப்ளை லாரிகளில் வினியோகம் செய்ய எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 15, 2024 03:53 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில், குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்ய, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: மாநகராட்சியில் ஏற்கனவே மூன்று நாட்களுக்கு ஒரு முறை, ஐந்து நாட்களுக்கு ஒரு முறை என குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது கோடை தொடங்கியுள்ளதால் ஒரு வாரம், 10 நாட்களுக்கு ஒரு முறை என குடிநீர் வினியோகம் தள்ளிப்போகிறது. காவிரி ஆறு வறண்டு விட்ட நிலையில், வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால், பணம் கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் வராத நாட்களில், லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்ய, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி பகுதியில் தினமும், 80 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கோடை காலம் மற்றும் மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படாததால், ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் இருக்கிறது.
தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள நீரை கொண்டு வினியோகம் செய்யப்படுகிறது. கோடை காலத்தில் முறையான வினியோகம் குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசித்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.

