/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி கிளை வாய்க்காலில் அடைப்பு சீரமைப்பு பணியில் கைகோர்த்த விவசாயிகள்
/
கீழ்பவானி கிளை வாய்க்காலில் அடைப்பு சீரமைப்பு பணியில் கைகோர்த்த விவசாயிகள்
கீழ்பவானி கிளை வாய்க்காலில் அடைப்பு சீரமைப்பு பணியில் கைகோர்த்த விவசாயிகள்
கீழ்பவானி கிளை வாய்க்காலில் அடைப்பு சீரமைப்பு பணியில் கைகோர்த்த விவசாயிகள்
ADDED : செப் 08, 2024 07:48 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து, கீழ்பவானி பிரதான கால்வாயில் நஞ்சை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் நெல் சாகுபடி பணிகள் நடக்கிறது.
முதல் போக சாகுபடிக்காக ஒரு லட்சத்து, 3,500 ஏக்கர் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பெருந்துறை அருகே பிரதான கால்வாயில் இருந்து, 500 ஏக்கர் பாசனத்துக்காக திண்டல் கிளை வாய்க்கால் பிரிந்து செல்கிறது. திண்டல் மேடு, வித்யா நகர் என்ற இடத்தில், சாலையின் குறுக்கே செல்லும் கால்வாய் தண்ணீர் செல்ல பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் அவ்வப்போது அடைப்பு ஏற்படுவதும், நீர்வள துறை ஊழியர்கள் அப்புறப்படுத்துவதுமாக உள்ளனர். இந்நிலையில் பூமாலை, வாழை இலைகள் வாய்க்காலில் அடித்து வரப்பட்டு வித்யா நகர் பாலத்தில் உள்ள குழாயில் அடைத்து கொண்டது.
இதனால் வாய்க்காலில் தண்ணீர் தேங்கி வெளியேறி வீணானது. தகவலறிந்து நீர்வளத்துறை ஊழியர்கள் சென்றனர். குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் வழிந்து வீணாகும் பகுதியில் பொக்லைன் மூலம் சீரமைக்க முயற்சி மேற்கொண்டனர். எனினும் அடைப்பு சரியாகாததால் குழாயை அகற்றிய பிறகு அடைப்பு சரியானது. அடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு கீழாக, 200 ஏக்கரில் நெல் நடவு பணி மேற்கொள்ள வேண்டி இருப்பதால், விவசாயிகளும் பணிக்கு உதவி செய்தனர்.