ADDED : ஏப் 09, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்;காங்கேயம் அருகே சிவன்மலை கிராமம், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் வேலன், 65; சிமெண்ட் சீட், மரத்திலான வீட்டில் ன் வசிக்கிறார்.
மனைவியுடன் நேற்று காலை வேலைக்கு சென்று விட்டார். காலை, 10:40 மணி அளிவில் வீட்டுக்குள் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள், இரண்டு மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். ஆனாலும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து விட்டன.

