/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாயாற்றில் வெள்ளப்பெருக்கு: வாகனங்கள் செல்ல தடை
/
மாயாற்றில் வெள்ளப்பெருக்கு: வாகனங்கள் செல்ல தடை
ADDED : ஜூலை 18, 2024 01:39 AM
பு.புளியம்பட்டி: நீலகிரி மலைப் பகுதியில் கன மழை பெய்து வருவதால், மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றை கடந்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடர்ந்த வனப்
பகுதியை ஒட்டி தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம்பா-ளையம் ஆகிய வனகிராமங்கள் உள்ளன. இதில், 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள இக்கிராம மக்கள் மாயாற்றில் நீர் குறைவாக செல்லும் சமயங்களில் நடந்தே ஆற்றை கடந்து செல்-கின்றனர். வெள்ளப்பெருக்கு காலங்களில் வாகனம் மற்றும் பரி-சலில் பயணிக்கின்றனர்.
கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக நீலகிரி மாவட்ட மலைப்-பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மாயாற்றில் வெள்ளப்-பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது பவானிசாகர் அணைக்கு நீர்-வரத்து, 21,383 கன அடியாக அதிகரித்துள்ளதால், மாயாற்றில் மழை நீர் செந்நிறத்தில் பெருக்கெடுத்து செல்கிறது. வன கிராம மக்கள் ஆற்றை கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் வன கிராம மக்கள் ஆபத்தான முறையில் பரிசலில் ஆற்றைக் கடந்து செல்கின்றனர். மாயாற்றில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், தெங்குமரஹாடா, கல்லம்பா-ளையம், அல்லிமாயாறு, சித்திரப்பட்டி உள்ளிட்ட கிராமங்க-ளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மாயாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து உள்ளதால் லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்-ளது. பொதுமக்கள் வாகனங்கள் மற்றும் பரிசல் மூலம் ஆற்றை கடக்கவேண்டாம் என வனத்
துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.