/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இரு மாநில எல்லையில் பறக்கும் படை சோதனை
/
இரு மாநில எல்லையில் பறக்கும் படை சோதனை
ADDED : ஏப் 24, 2024 02:22 AM
சத்தியமங்கலம்,
தமிழக - கர்நாடகா எல்லையான, காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தில் லோக்சபா தேர்தல் வரும், 26 மற்றும் மே, 7 என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அதையொட்டி தமிழக - கர்நாடகா எல்லையான காரப்பள்ளம் சோதனைச் சாவடியில், ஈரோடு மாவட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
* கர்நாடகாவில் வரும், 26ல், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணை சோதனைச்சாவடி, பர்கூர் போலீஸ் ஸ்டேஷன், கர்ககேண்டி செக்போஸ்ட், ஆகிய பகுதிகளில், பர்கூர் போலீசார் தீவிர வாகன சோதனை செய்த பின்னரே, கர்நாடகா மாநிலத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.

