ADDED : ஜூலை 06, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம் : தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க ஒன்றிய தலைவர் சுசிலா தலைமை வகித்தார். சமூக தணிக்-கையை கைவிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,10 ஆண்டு பணி முடித்த அமைப்பாளர்களுக்கு அரசு பணியில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர். சத்துணவு ஊழியர்கள், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.