/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண்ணை காரில் கடத்திய நான்கு பேர் அதிரடி கைது
/
பெண்ணை காரில் கடத்திய நான்கு பேர் அதிரடி கைது
ADDED : ஜூன் 28, 2024 01:53 AM
குளித்தலை, பெண்ணை காரில் கடத்திய, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
குளித்தலை அடுத்த, போத்தராவுத்தன்பட்டி பஞ்., காக்காயம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர், 22 வயது பெண். இவர், தோகைமலையில் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, 8:00 மணியளவில் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக காக்காயம்பட்டி. மேல கம்பேஸ்வரம் ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது சைலோ காரில் வந்த நான்கு பேர், அவரை வழி மறித்து, காரில் கடத்திச் சென்றனர். இது குறித்து பொது மக்கள் கொடுத்த தகவல்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வாகன சோதனை நடத்தி, காரில் கடத்திச் சென்ற நான்கு பேரை பிடித்து, பெண்ணை மீட்டனர்.
இது குறித்து, பெண் கொடுத்த புகார்படி மாரிப்பாறைப்பட்டி பிரகாஷ், 33, செந்தில்குமார், 33, ஓனாம்பாறைப்பட்டி வடிவேலு, 31, கோடாங்கி பட்டி டிரைவர் பாலசுப்பிரமணியன், 38, ஆகிய நான்கு பேரை தோகைமலை போலீசார் கைது செய்து, எதற்காக பெண்ணை கடத்தினர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.