/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாசில்தார் டிரைவர் குடும்பத்துக்கு நிதி
/
தாசில்தார் டிரைவர் குடும்பத்துக்கு நிதி
ADDED : ஆக 13, 2024 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானி தாசில்தார் அலுவலக டிரைவராக பணிபுரிந்தவர் சையது ஜலால், 45; உடல் நலக்குறைவால் ஒரு வாரத்துக்கு முன் இறந்தார்.
இவருக்கு ஓய்வூதியம் இல்லாததால், ஈரோடு மாவட்ட அரசுத்துறை ஓட்டுனர் சங்கத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் நன்கொடை பெறப்பட்டது. இந்த வகையில் சேர்ந்த, 91,200 ரூபாயை, பவானியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று, அரசுத்துறை ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் நேற்று வழங்கினர்.

