/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சூதாட்டம்; 10 பேர் கைது ரூ.2.42 லட்சம் பறிமுதல்
/
சூதாட்டம்; 10 பேர் கைது ரூ.2.42 லட்சம் பறிமுதல்
ADDED : ஆக 09, 2024 02:39 AM
அந்தியூர்: அந்தியூர், புதுப்பாளையத்தில் குருநாதசாமி கோவில் தேர்திருவி-ழாவை முன்னிட்டு, கால்நடை சந்தை நடந்து வருகிறது. இதற்-காக வெளி மாவட்டங்களில் வந்திருந்த சிலர், குதிரை சந்தை நடைபெறும் ஒரு சிறிய கொட்டகையில், பணம் கட்டி சீட்டாட்-டத்தில் ஈடுபட்டு வருவதாக, அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கே இருந்த பவானி, தளாவாய்பேட்டையை சேர்ந்த, ஆறுமுகம், 49, சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்த பால்சாமி, 37, எண்ணமங்க-லத்தை சேர்ந்த நாகராஜன், 34, அந்தியூர் மோகன், பவானி மணி-வண்ணன், 28, நல்லிபாளையம் தர்மன், 41, பவானி சேகர், 32 மற்றும் அதே பகுதியை சேர்ந்த, சரவணன், 51, குருசாமி, 41, சின்னதம்பிபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன், 42, என 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்-டுகள், ஒன்பது மொபைல்போன்கள், இரண்டு லட்சத்து, 42 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.