/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகரில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம்
/
மாநகரில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம்
ADDED : செப் 10, 2024 07:25 AM
ஈரோடு : மாநகரில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கவுள்ளது. இதையொட்டி, 5௦௦க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இந்து முன்னணி, இந்து அமைப்புகள் மற்றும் மக்கள் சார்பில், 1,535 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இதில் ஈரோடு மாநகரில் மட்டும், 134 சிலைகள் அமைத்து பூஜை, வழிபாடு நடந்தது. மாநகரில் விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது.ஈரோடு சம்பத் நகர் நால்ரோட்டில் இருந்து விநாயகர் ஊர்வலம் துவங்குகிறது. பெரியவலசு நால்ரோடு, முனிசிபல் காலனி, மேட்டூர் சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை, காமராஜர் சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே.வி சாலை, காவிரி சாலை, கருங்கல்பாளையம், கருங்கல்பாளையம் போலீஸ் சோதனை சாவடி வழியே காவிரி ஆற்றின் பழைய பாலம் பகுதிக்கு சென்றடைகிறது. அங்கு விசர்ஜனம் செய்யப்பட உள்ளது. ஊர்வலத்துக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. ஊர்வலம் செல்லும் போது அந்த சில மணி நேரம், மாற்று பாதையில் திருப்பி விடப்படும்.
* ஈரோடு அசோகபுரம் பகுதியில் 13 விநாயகர் சிலைகளை இந்து முன்னணியினர், நேற்று மாலை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க இருப்பதாக தகவல் பரவியது. போலீசார் அனுமதி மறுத்தனர்.தடையை மீறி ஊர்வலம் செல்லக்கூடும் என்பதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் மாநகரில் நேற்று சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

