/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் வாரச்சந்தை மேம்பாட்டு பணி ஓராண்டாக முடக்கம் மெத்தன ஒப்பந்ததாரர், கண்டுக்காத அதிகாரிகளால் அவதி
/
காங்கேயம் வாரச்சந்தை மேம்பாட்டு பணி ஓராண்டாக முடக்கம் மெத்தன ஒப்பந்ததாரர், கண்டுக்காத அதிகாரிகளால் அவதி
காங்கேயம் வாரச்சந்தை மேம்பாட்டு பணி ஓராண்டாக முடக்கம் மெத்தன ஒப்பந்ததாரர், கண்டுக்காத அதிகாரிகளால் அவதி
காங்கேயம் வாரச்சந்தை மேம்பாட்டு பணி ஓராண்டாக முடக்கம் மெத்தன ஒப்பந்ததாரர், கண்டுக்காத அதிகாரிகளால் அவதி
ADDED : ஆக 02, 2024 02:01 AM
காங்கேயம், காங்கேயம் நகராட்சி வாரச்சந்தையில், மேம்பாட்டு பணி கிடப்புக்கு போயுள்ளதால், வியாபாரிகள் மற்றும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
காங்கேயம் வாரச்சந்தை திங்கட்கிழமை தோறும் நடக்கிறது. திருப்பூர் மட்டுமின்றி கோவை, கரூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் வருகின்றனர். காங்கேயம் சுற்று வட்டாரத்தில் உள்ள, நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்கள் விளைபொருட்களை கொண்டு வருகின்றனர். சந்தையில் எவ்வித அடிப்படை வசதியுமின்றி வியாபாரிகள், மக்கள் அவதிக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில், 2022 மே மாதம், 9.62 கோடி ரூபாய் மதிப்பில், 380 கடைகளுடன், அடிப்படை வசதி மேம்படுத்தும் பணியை, அமைச்சர் சாமிநாதன் பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.
சந்தையில், 304 கடைகள், வசதியாக வழித்தடம், மழை-வெயில் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க வசதியும் செய்யப்படுகிறது. இத்துடன் ஒரு பெரிய குடோன். சந்தைக்கு வரும் மக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் ஏ.டி.எம்., சென்டர் மற்றும் கழிவறை உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது.
மக்களின் வாகனங்கள் நிறுத்த தனியாக பார்க்கிங் வசதி, குடிநீர் வசதி, 24 மணி நேரம் பாதுகாப்பு, செக்யூரிட்டி ரூம், சந்தையை சுற்றி தீயணைப்பு வாகனம் எளிதில் வந்து செல்ல, 24 அடி அளவில் சாலை வசதி என நவீன முறையில் பணிகள் துவங்கி நடந்தது. ௫௦ சதவீத பணி நடந்த நிலையில், ஓராண்டாக எவ்வித பணியும் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாரச்சந்தை குறுகிய இடத்தில், இட நெருக்கடியுடன் நடக்கிறது. வியாபாரிகள் கடை அமைக்க முடியாமலும், வந்து செல்வதில் மக்களுக்கு சிரமும் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் சாமிநாதன் முயற்சியால் உடனடியாக நிதி ஒதுக்கி, பணி நடந்தது. ஆனால், ஒப்பந்ததரார் மற்றும் அதிகாரிகள் அலட்சியத்தால் பணி தொய்வடைந்துள்ளது. மேலும் ஓராண்டில் பணி முடிக்கப்படும் என தெரிவித்தனர். தற்போது இரண்டாண்டு முடிந்தும் பணிகள் நிறைவடையவில்லை. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க, சந்தை வியாபாரிகள் மற்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.