/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் ஓரிரு நாளில் எஸ்கலேட்டர் இயங்கும்?
/
கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் ஓரிரு நாளில் எஸ்கலேட்டர் இயங்கும்?
கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் ஓரிரு நாளில் எஸ்கலேட்டர் இயங்கும்?
கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் ஓரிரு நாளில் எஸ்கலேட்டர் இயங்கும்?
ADDED : மே 17, 2024 02:14 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மூன்று மாடியில் ஜவுளி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. மூன்று மாடிகளுக்கும் செல்ல இரு இடங்களில் எஸ்கலேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பயன்பாட்டுக்கு வரவில்லை. இதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால், மக்கள் அதிகம் வர வாய்ப்புள்ளதாக, மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம், கடை வியாபாரிகள் மனு அளித்திருந்தனர். எஸ்கலேட்டர் இயக்குவதற்கான அனுமதி சான்று கிடைக்காததே, தாமதம் ஏற்படுவதற்கு காரணம் என்று தெரிகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கனி மார்க்கெட் வணிக வளாக எஸ்கலேட்டரை பயன்பாட்டுக்கு கொண்டு வர, வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில், இரு நாட்களுக்கு முன், எலக்ட்ரிக் இன்ஸ்பெக்டர் ஆய்வு மேற்கொண்டார். எனவே சான்றிதழ் ஒரு சில நாட்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். சான்று கிடைத்தவுடன் பயன்பாட்டுக்கு வந்து விடும். இவ்வாறு கூறினர்.