/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜி.ஹெச்., துாய்மை பணியாளர் சஸ்பெண்ட்
/
ஜி.ஹெச்., துாய்மை பணியாளர் சஸ்பெண்ட்
ADDED : ஜூலை 04, 2024 07:16 AM
ஈரோடு : ஈரோடு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், கடந்த வாரம் நோயாளி ஒருவருக்கு துாய்மை பணியாளர் 'குளுக்கோஸ் மற்றும் மருந்து பாட்டிலை' டிரிப்ஸ் மூலம் மாற்று பணியை மேற்கொண்டார்.
டாக்டர் அல்லது செவிலியர்கள் மட்டுமே, இது-போன்ற பணிகளை செய்ய வேண்டும் என விதிகள் உள்ளன. இந்நிலையில், துாய்மை பணியாளர் டிரிப்ஸ் மாற்றம் செய்ததை, அங்கிருந்த சிலர் மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து, பரவ விட்டனர். இதுபற்றி, அரசு மருத்துவமனை கண்காணிப்-பாளர் வெங்கடேசன் விசாரித்து, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் அம்பிகா சண்முகத்துக்கு அறிக்கை வழங்கினார். இதன் அடிப்படையில் ஒப்பந்த துாய்மை பணியாளர் விஜயகு-மாரை, ஒப்பந்த நிறுவனம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.