/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி-பவானி-அந்தியூரில் கிராம நிர்வாக அலுவலர் ஆர்ப்பாட்டம்
/
கோபி-பவானி-அந்தியூரில் கிராம நிர்வாக அலுவலர் ஆர்ப்பாட்டம்
கோபி-பவானி-அந்தியூரில் கிராம நிர்வாக அலுவலர் ஆர்ப்பாட்டம்
கோபி-பவானி-அந்தியூரில் கிராம நிர்வாக அலுவலர் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 10, 2024 07:30 AM
கோபி : தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில், கருப்பு பேட்ச் அணிந்து, கோபி தாலுகா ஆபீஸ் முன் நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மொபைல் செயலி மூலம் பயிர் கணக்கெடுப்பு பணிக்கு உபகரணங்கள் மற்றும் செலவின தொகையினை உறுதி அளித்தபடி வழங்காததை கண்டித்து, கருப்பு பேட்ச் அணிந்து ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.
* பவானி தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க கூட்டமைப்பு சார்பில், டிஜிட்டல் கிராப்ட் சர்வே பணியில் இருந்து விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க வட்ட செயலாளர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். பொருளாளர் விவேகானந்தன், தலைவர் சுத்தானந்த சீனிவாசன் முன்னிலை வகித்தனர். இதேபோல் அந்தியூர் தாலுகா அலுவலகம் முன், மாவட்ட பொருளாளர் தமிழரசன் தலைமையில், பொருளாளர் சந்தோஷ், வட்ட செயலாளர் வீரமுத்து உட்பட, 15 வி.ஏ.ஒ.,க்கள் கறுப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.