/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முதல்வர் பதவி விலக கோரிபா.ஜ.,வினர் சாலை மறியல்
/
முதல்வர் பதவி விலக கோரிபா.ஜ.,வினர் சாலை மறியல்
ADDED : ஜூன் 23, 2024 02:40 AM
ஈரோடு:கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்த, 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இதை கண்டித்தும், முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கோரியும், ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், சூரம்பட்டி நால்ரோட்டில் தடையை மீறி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வேதானந்தம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின், மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சர் முத்துசாமி பதவி விலக கோரி கோஷமிட்டனர். இந்நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்ய துவங்கினர். அப்போது பா.ஜ., மகளிரணியினர், சூரம்பட்டி நால்ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஸ்டாலின் உருவ பொம்மையை பாடையில் கட்டி எடுத்து வந்ததால், போலீசார் கைப்பற்றி அகற்றினர். சாலை மறியல், பாடை கட்டி போராட்டம் என பா.ஜ.,வினரால் அப்பகுதி பரபரப்பானது. இதில் ஈடுபட்ட, 30 பெண்கள் உள்ளிட்ட, 200 பேரை போலீசார் கைது செய்தனர். திடீர் சாலை மறியலால், ௧௦ நிமிடம் போக்குவரத்து பாதித்தது.