/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவையின் புத்தக திருவிழா ஈரோட்டில் நாளை துவக்கம்
/
அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவையின் புத்தக திருவிழா ஈரோட்டில் நாளை துவக்கம்
அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவையின் புத்தக திருவிழா ஈரோட்டில் நாளை துவக்கம்
அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவையின் புத்தக திருவிழா ஈரோட்டில் நாளை துவக்கம்
ADDED : ஜூலை 31, 2024 10:37 PM
ஈரோடு:ஈரோடு சி.என்.கல்லுாரி வளாகத்தில், அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நாளை புத்தக திருவிழா துவங்குகிறது.
மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவை சார்பில், 20வது ஆண்டு ஈரோடு புத்தக திருவிழா நாளை மாலை, 6:00 மணிக்கு துவங்குகிறது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைக்கிறார். 250 தமிழ், ஆங்கில புத்தக அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஜப்பான், மலேசியா உட்பட பல நாட்டில் இருந்து தமிழ் எழுத்தாளர்கள் வருகை புரிகின்றனர்.
புத்தக வெளியீட்டு அரங்கில், தினமும் குறிப்பிட்ட புதிய புத்தகங்கள் வெளியிடப்படும். அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருதுக்காக, ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்பாளர்களிடம் இருந்து அவர்களது தொகுப்புகள் வருகின்றன. அவற்றை, 'பட்நாகர் விருது பெற்ற விஞ்ஞானி' லட்சுமணன் தலைமையிலானோர் தேர்வு செய்து, ஒருவருக்கு, 1 லட்சம் ரூபாய் பரிசுடன், விருது வழங்கப்படுகிறது.
புத்தக திருவிழா ஆக., 2 முதல், 13 வரை, 12 நாட்கள் தினமும் காலை, 11:00 மணி முதல் இரவு, 9:30 மணி வரை நடக்கும். தினமும் மாலை, 6:00 மணிக்கு மாநில நேர நிகழ்வு துவங்கும்.
இதில் பாரதி கிருஷ்ணகுமார், பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா, பாரதி பாஸ்கர், எழுத்தாளர் பாவா செல்லதுரை, சூழலியலாளர் கோவை சதாசிவம், சாகித்ய அகாடமி விருது பெற்ற தேவிபாரதி, விஞ்ஞானிகள் ராமசாமி, லட்சுமணன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், விஞ்ஞானி சிவதாணு பிள்ளை என பலரும் பேச உள்ளனர்.
இவ்வாறு கூறினார்.
பொதுக்குழு உறுப்பினர்கள் சண்முகம், பொன்னுசாமி, பொருளாளர் அழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.