/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தமிழ் வளர்ச்சி துறை பேச்சுப்போட்டியில் அரசுப்பள்ளி, கல்லுாரி மாணவர் அபாரம்
/
தமிழ் வளர்ச்சி துறை பேச்சுப்போட்டியில் அரசுப்பள்ளி, கல்லுாரி மாணவர் அபாரம்
தமிழ் வளர்ச்சி துறை பேச்சுப்போட்டியில் அரசுப்பள்ளி, கல்லுாரி மாணவர் அபாரம்
தமிழ் வளர்ச்சி துறை பேச்சுப்போட்டியில் அரசுப்பள்ளி, கல்லுாரி மாணவர் அபாரம்
ADDED : செப் 14, 2024 02:07 AM
தமிழ் வளர்ச்சி துறை பேச்சுப்போட்டியில்
அரசுப்பள்ளி, கல்லுாரி மாணவர் அபாரம்
ஈரோடு, செப். 14-
ஈரோடு மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான பேச்சு போட்டி இரு தினங்களாக நடந்தது. நேற்று முன்தினம் நடந்த பேச்சுப்போட்டியில் ஆறு முதல் பிளஸ் 2 வரையிலானோர், 35 பேரும், கல்லுாரி மாணவ-மாணவியர், 20 பேரும் பங்கேற்றனர். இரண்டாம் நாளாக நேற்று நடந்த போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள், 26 பேர் பங்கேற்றனர். தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் இளங்கோ, ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் நிகழ்ச்சியை ஆய்வு செய்தனர்.
பள்ளி அளவிலான பேச்சுபோட்டியில் கவுந்தப்பாடி அரசு மகளிர் மேல்நிலை பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி பிரணிதா முதலிடம்; வலையபாளையம் அரசு உயர்நிலை பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி தமிழ்கனி இரண்டாமிடம்; ஓடத்துறை அரசு மேல்நிலை பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி கவிபிரியா மூன்றாமிடம்; கருங்கல்பாளையம் நகரவை மகளிர் மேல்நிலை பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி அக்ஷய சக்தி, குமலன்குட்டை அரசு மேல்நிலை பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் நிதின் சிறப்பு பரிசு பெறுகின்றனர்.
கல்லுாரி அளவிலான பேச்சுப்போட்டியில், பாரதியார் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மைய முதலாண்டு முதுகலை தமிழ் மாணவர் அமல் உன்னி கிருஷ்ணன் முதலிடம்; வேளாளர் மகளிர் கல்லுாரி இரண்டாமாண்டு வணிகவியல் பிரிவு மாணவி காவியா இரண்டாமிடம்; கோபி கலை கல்லுாரி வணிகவியல் முதலாண்டு மாணவி கனிகாபிரியா மூன்றாமிடம் பிடித்தனர்.
நேற்று பள்ளி அளவில் நடந்த போட்டியில் நெரிஞ்சிபேட்டை அரசுமேல்நிலை பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் சவுத்ரி முதலிடம்; ஓடத்துறை அரசு மேல்நிலை பள்ளி ஒன்பதாம் வகுப்பு அவிஷ்னா இரண்டாமிடம்; வலையபாளையம் அரசு உயர்நிலை பள்ளி எட்டாம் வகுப்பு தமிழ்கனி மூன்றாமிடம்; ஆ.புதுப்பாளையம் அரசு மேல்நிலை பள்ளி எட்டாம் வகுப்பு சத்ய பிரபல்யா, தாசப்ப கவுண்டன்புதுார் அரசு மேல்நிலை பள்ளி பிளஸ் 1 மாணவர் பிரேம் குமார் சிறப்பு பரிசு பெறுகின்றனர். இதேபோல் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு நடந்த பேச்சு போட்டியில், ஆர்.ஏ.என்.எம்.கலை கல்லுாரி முதுகலை இரண்டாமாண்டு ஆங்கில பிரிவு மாணவர் தமிழரசன் முதலிடம்; அறச்சலுார் நவரசம் கலை அறிவியல் மகளிர் கல்லுாரி முதுகலை தமிழ் இலக்கிய பிரிவு மாணவி தரணிப்பிரியா இரண்டாமிடம்; கோபி கலை அறிவியல் கல்லுாரி இளங்கலை இரண்டாமாண்டு பொருளியியல் பிரிவு மாணவி பார்கவி மூன்றாமிடம் பிடித்தார். இவர்களுக்கு கலெக்டர் பரிசு, சான்றிதழ் வழங்க உள்ளார்.