ADDED : செப் 03, 2024 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி, மேற்கு அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் ராஜசேகர், 43, அரசு பஸ் கண்டக்டர். இவர் மனைவி மோகனாம்பாள், 37; ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையல் உதவியாளர். நேற்று முன்தினம் காய்ச்சல் பாதித்த மனைவியை, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ராஜசேகர் அழைத்து சென்றார்.
மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த சில மணி நேரத்தில் மோகனாம்பாள் அசைவின்றி இருந்ததால், மீண்டும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டாக்டர்கள் பரிசோதனையில் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ராஜசேகர் புகாரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.