/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.15.24 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
/
ரூ.15.24 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
ADDED : ஏப் 11, 2024 11:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுமுடி: கொடுமுடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ரூ.15 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.
கொடுமுடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள், 617 நிலக்கடலை மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 60.40 ரூபாய், அதிகபட்சமாக, 79.40 ரூபாய், சராசரியாக, 75.30 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 208.06 குவிண்டால் நிலக்கடலை, 15 லட்சத்து, 24 ஆயிரத்து, 580 ரூபாய்க்கு விற்பனையானது. இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜமுனா தெரிவித்தார்.

