/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க கூட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க கூட்டம்
ADDED : ஜூலை 14, 2024 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட பீனிக்ஸ் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம், மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலை-மையில் நடந்தது. மாவட்ட துணை தலைவர் அருணாசலம் முன்-னிலை வகித்தார். பொது செயலாளர் மணிகண்டன் வரவேற்றார்.
டிச., 3 இயக்க மாநில துணை தலைவர் மோகன்ராஜ், மாநில பொதுச் செயலாளர் அண்ணாமலை உட்பட பலர் பேசினர்.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னு-ரிமை அடிப்படையில் வீடுகள் வழங்க ஏதுவாக, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடைகள் நடத்த, நகர விற்பனைக்குழு விதிப்படி முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.