/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறை சாகர் பள்ளியில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
/
பெருந்துறை சாகர் பள்ளியில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
பெருந்துறை சாகர் பள்ளியில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
பெருந்துறை சாகர் பள்ளியில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : ஆக 11, 2024 03:15 AM
பெருந்துறை: பெருந்துறை, சாகர் இன்டர்நேஷனல் பள்ளியில், பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் வகுப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சியை, பள்ளி தாளாளர் சௌந்தரராஜன் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் ஷீஜா வரவேற்றார். பள்ளிக்கல்வி இயக்குனர் சுரேந்திர ரெட்டி முன்னிலை வகித்தார்.
கேட் நிறுவனத்தின் முதன்மை கல்வி அலுவலர் அஸ்வின், மாணவர்களின் பள்ளி படிப்பிற்கு பிறகு, எந்த துறைகளை தேர்ந்தெடுத்து, அவற்றை எங்கு படிக்கலாம் என்றும், அதற்கான சிறந்த கல்லுாரிகள் எங்கெங்கு உள்ளது என்பதையும், அப்படிப்பட்ட கல்லுாரிகளில் சேர்வதற்கான வழிமுறைகளையும் விளக்கி பேசினார். மேலும், எதிர் காலத்தில் வேலை வாய்ப்பை அளிக்கும் துறைகள் பற்றி பல்வேறு தகவல்களை எடுத்துக் கூறினார்.
இதில் பிளஸ் 2 மாணவர்களும், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.