/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பனையம்பள்ளி பஞ்.,ல் சுகாதார வளாகம் திறப்பு
/
பனையம்பள்ளி பஞ்.,ல் சுகாதார வளாகம் திறப்பு
ADDED : ஜூன் 25, 2024 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி: @Image1@பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம் பனையம்பள்ளி ஊராட்சி அலுவலகம் அருகில், புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் மற்றும் புஜங்கனுார் நியாய விலை கடை அருகில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.
மேலும் புஜங்கனுார் நெசவாளர் காலனி, பெரியபருசாபாளையம் பகுதியில் அமைக்கப்பட்ட தெரு விளக்குகள், உங்கனுார் குட்டை பகுதியில் அமைக்கப்பட்ட தெருவிளக்குகளை, பனையம்பள்ளி ஊராட்சி தலைவர் நாகேந்திரன் துவக்கி வைத்தார். நிகழ்வில் துணைத்தலைவர் வேலுச்சாமி, வார்டு உறுப்பினர்கள் தர்மன், வசந்தாமணி, கவிதா, நாகராஜ் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.