/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : மே 19, 2024 02:47 AM
பு.புளியம்பட்டி: பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதி மற்றும் அணையை ஒட்டிய வனப்பகுதிகளில், தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காரணமாக அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணை நீர்வரத்து, 194 கன அடியாக இருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை, 1,192 கன அடியாக அதிகரித்தது. அணை நீர்மட்டம், 44.58 அடி; நீர் இருப்பு, 3.2 டி.எம்.சி.,யாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில், 205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

